புதுவகை உருமாறிய கொரோனா தொற்றால் சிங்கப்பூருக்கான விமான சேவையை ரத்து செய்க!: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை..!!

டெல்லி: புதுவகை உருமாறிய கொரோனா தொற்று பரவல் காரணமாக சிங்கப்பூருக்கான விமான சேவையை இந்தியா ரத்து செய்ய வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கைவிடுத்துள்ளார். சுற்றுலாவுக்கு பெயர் போன சிங்கப்பூரில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அந்நாட்டில் 61 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு 500க்கும் குறைவானோரே சிகிச்சையில் உள்ளனர். 

இதனிடையே உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா குழந்தைகளை அதிகம் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகளை மூடி சிங்கப்பூர் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் புதுவகை உருமாறிய கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சிங்கப்பூருக்கான விமான சேவையை இந்தியா ரத்து செய்ய வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கைவிடுத்துள்ளார். 

இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  சிங்கப்பூரில் பரவும் புதுவகையான உருமாறிய கொரோனா தொற்று குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் உருமாறிய கொரோனா தொற்று ஏதும் சிங்கப்பூரில் கண்டறியப்படவில்லை என்று அந்நாட்டு ஹைகமிஷன் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள பி1 6172 வகை உருமாறிய தொற்றே பல்வேறு சோதனைகளில் தெரியவந்துள்ளதாகவும் சிங்கப்பூர் ஹைகமிஷன் விளக்கம் அளித்துள்ளது. 

Related Stories: