கொரோனாவை வென்ற ரத்த புற்றுநோய் பாதித்த குழந்தை: மருத்துவமனையில் நோயாளிகள் உற்சாகம்

வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியின் ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனையில் ரத்த புற்றுநோய் பாதித்த 4 வயது குழந்தை அனுமதிக்கப்பட்டது. டாக்டர் அசீம் மிஸ்ராவின் மேற்பார்வையில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அந்த குழந்தைக்கும், அவரது தாயாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவர்களுக்கு ‘பாசிடிவ்’ உறுதியானது. அதையடுத்து, இருவரும் கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டனர். தொடர் சிகிச்சைக்கு பின், புற்றுநோய் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை கொரோனா தொற்றில் இருந்தும் மீண்டது. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா நெகடிவ் வந்தது.

அதையடுத்து மருத்துவமனையில் இருந்த ஊழியர்களும், உறவினர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மருத்துவர் அசிம் மிஸ்ரா கூறுகையில், ‘புற்றுநோய் பாதித்த குழந்ைதக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்ததால், வெறும் 8 நாட்களில் கொரோனாவை வென்றுள்ளார். அந்த குழந்தை கொரோனாவை வென்றதை, மற்ற கொரோனா நோயாளிகளிடையே மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக புற்றுநோய் பாதித்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவு. இருந்தாலும், இந்த குழந்தை கொரோனாவை வென்றது’ என்றார்.

Related Stories: