சட்டமன்ற காங்., தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிப்பு: எம்எல்ஏக்களிடம் மேலிட குழு நடத்திய வாக்கெடுப்பில் முந்தியது யார்?: சோனியா விரைவில் அறிவிக்கிறார்

சென்னை: தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், மேலிட குழு நடத்திய வாக்கெடுப்பில் யாருக்கு மெஜராட்டி கிடைத்துள்ளது என்பதோடு பாஜவுக்கு பதிலடி கொடுக்கும்  ஒருவரை தேர்வு செய்து சோனியாகாந்தி அறிவிக்க உள்ளதாக காங்கிரசார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.   தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நீண்ட காலத்துக்கு பிறகு இந்த சட்டமன்ற தேர்தலில் 18 எம்எல்ஏக்களை பெற்றுள்ளது. ஆனாலும் எப்போதும் போலவே கோஷ்டிப் பூசலால் சட்டமன்ற குழுத் தலைவரைக்  தேர்வு செய்ய முடியாமல் திணறி  வருவது காங்கிரசார் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, புதுச்சேரி எம்.பி வைத்தியலிங்கம், மேலிட பொறுப்பாளர் தினேஷ்  குண்டுராவ் பங்கேற்ற எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது.  அதில் காங்கிரஸ் சட்ட பேரவை தலைவரை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடந்தது. அதை வைத்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாவிடம் போனில் பேசி முடிவை அறிவித்துவிடலாம் என முடிவெடுத்தனர்.ஆனால் டெல்லி மேலிடமோ, எம்எல்ஏக்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு விபரத்தையும்,  அனைவரது பயோடேட்டாக்களை அறிக்கையாக தயார் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் கேரளாவிலும் இதே முறை பின்பற்றப்பட்டதால் அதற்கான  அறிக்கையையும் சேர்த்து மேலிட தலைவர்களுடன் விவாதித்து சோனியா காந்தி அறிவிப்பு வெளியிடுவார் என்று உத்தரவிட்டது. இதனால் மேலிட குழு அறிக்கை தயார் செய்து டெல்லி புறப்பட்டு சென்றனர். இதனால் சோனியா காந்தி  விரைவில் அறிப்பு வெளியிடுவார் என்று தமிழக காங்கிரசார் தெரிவித்தனர்….

The post சட்டமன்ற காங்., தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிப்பு: எம்எல்ஏக்களிடம் மேலிட குழு நடத்திய வாக்கெடுப்பில் முந்தியது யார்?: சோனியா விரைவில் அறிவிக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: