‘ரியாலிட்டி ஷோ போன்ற வாழ்க்கை’ இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து 20 வயதில் விலக நினைத்தேன்: இளவரசர் ஹாரி பரபரப்பு பேட்டி

லாஸ் ஏஞ்சல்ஸ்: இங்கிலாந்து அரச குடும்பத்து வாழ்க்கையை ரியாலிட்டி ஷோ உடனும், மிருகக்காட்சி சாலையில் வாழ்வதற்கு சமமாகவும் ஒப்பிட்டு இளவரசர் ஹாரி பேட்டி கொடுத்துள்ளார். இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் கடந்த ஆண்டு வெளியேறி, அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இங்கிலாந்து அரண்மனையில் நிறவெறி பாதிப்புக்குள்ளானதாக மேகன் சமீபத்தில்  அளித்த பேட்டியில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இளவரசர் ஹாரி மற்றொரு நிகழ்ச்சியில் அளித்துள்ள பேட்டியில், ‘‘கடந்த 1998ம் ஆண்டு நடிகர் ஜிம்கேரி நடித்த ‘தி ட்ரூமேன் ஷோ’ படத்தில் வருவதைப் போலதான் அரச குடும்பத்து வாழ்க்கையை அனுபவித்தேன். ஏதோ  மறைக்கப்பட்ட கேமரா முன்பாக ரியாலிட்டி ஷோவில் நடிப்பதை போன்ற உணர்வுகள் இருந்தன. என் அம்மா டயானா எங்கு சென்றாலும் அவரை விரட்டி விரட்டி புகைப்படம் எடுத்தனர்.

அவரைப் போன்ற நிலைமை எனது மனைவிக்கும்  குழந்தைக்கும் ஏற்படுமோ என்றும் பயந்தேன். எனவே அந்த வேலையை நான் விரும்பவில்லை, அங்கிருக்க எனக்கு பிடிக்கவில்லை. எனது 20 வயதிலேயே அரச குடும்பத்தை விட்டு விலக விரும்பினேன். இப்போது அதிலிருந்து வெளியேறிய  பின் சுதந்திரமாக உணர்கிறேன். என் மகனை சைக்கிளில் வைத்து அழைத்துச் செல்ல முடிகிறது. சுதந்திரமாக ரோட்டில் நடக்கிறேன்’’ என்றார்.

Related Stories: