கொரோனா மேலும் பல வகைகளில் உருவாக வாய்ப்பு...இந்தியாவிற்கு உடனே உதவுங்கள் : அமெரிக்க எம்பிக்கள் 54 பேர் கடிதம்!!

வாஷிங்டன் : கொரோனா 2வது அலையால் சின்னாபின்னாமாகி வரும் இந்தியாவிற்கு உடனே உதவுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு அந்நாட்டு எம்பிக்கள் 57 பேர் கடிதம் எழுதியுள்ளனர். கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜனநாயக கட்சி எம்பியான பிராட் ஷர்மன் தலைமையில் இந்த கடிதத்தை எம்பிக்கள் எழுதியுள்ளனர். இந்தியாவில் உச்சம் அடைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்று மேலும் பல வகைகளில் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க எம்பிக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அத்தகைய உருமாறும் வைரஸ்கள் அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா தொற்று எங்கிருந்தாலும் அந்த இடங்களுக்கு அமெரிக்கா தனது பங்கை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு எம்பிக்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்சித் சிங்கிடம் அமெரிக்க எம்பிக்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதன்படி ஆக்சிஜன், ஆக்சிஜன் உற்பத்தி உபகரணங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் ரெம்டிசிவிர்  போன்ற மருந்துகளை இந்தியாவிற்கு வழங்க அதிபர் ஜோபிடனுக்கு அந்நாட்டு எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர். கூடுதலாக தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய உதவுமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories: