திருச்சியில் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு: நாளொன்றுக்கு 50 நபர்களுக்கு மட்டுமே விநியோகம் என புகார்

திருச்சி: திருச்சியில் நாளொன்றுக்கு 50 பேருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுவதால் பல மாவட்டங்களில் இருந்து வந்த மக்கள் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரை செய்யப்படுகிறது. தற்போது திருச்சியில் இந்த ரெம்டெசிவிர் மருந்தானது கொடுக்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 300 வயால் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் கடந்த சனிக்கிழமை முதல் இந்த ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுகிறது.

திருச்சியை சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இருந்து மக்கள் இங்கு வந்து காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அடுத்த நாள்
வருபவர்களுக்கு டோக்கன் முறையே சரிவர செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 4 நாட்களாக மருந்து கிடைக்காமல் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளதாகவும் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல மாவட்டங்களில் இருந்து இங்கு வந்துள்ள மக்களுக்கு சரியான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories:

>