இலங்கை செல்லும் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலில் நியூசிலாந்துடன் மோத உள்ளது. இதற்காக கோஹ்லி தலைமையிலான 20 பேர் அடங்கிய இந்திய அணி வரும் 2ம் தேதி மும்பையில்  இருந்து லண்டனுக்கு தனி விமானத்தில் புறப்படுகின்றனர். இந்த போட்டி முடிந்ததும் அங்கேயே தங்கி இருந்து ஆகஸ்ட் முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை 5 டெஸ்ட் கொண்ட தொடரில்  இங்கிலாந்துடன் விளையாட உள்ளது. இதனிடையே ஜூலை மாதம் மற்றொரு  இந்திய அணி இலங்கைக்கு சென்று 3 ஒரு நாள் மற்றும் 3 டி.20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போட்டி ஜூலை 13, 16, 19, 22, 24, 27 ஆகிய தேதிகளில் கொழும்பில் நடைபெற உள்ளது.

இந்த அணியில், ஷிகர் தவான், ஹர்த்திக்,, குருணல் பாண்டியா, பிரித்வி ஷா, புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள் என தெரிகிறது. இதில் கேப்டனாக தவான் அல்லது ஹர்த்திக் பாண்டியா நியமிக்கப்படலாம். இதனிடையே இலங்கை செல்லும் இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பயிற்சியளராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

48 வயதான டிராவிட், ஏற்கனவே இந்தியா யு 19, இந்தியா ஏ அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். ரிஷப் பன்ட், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் அய்யர், சிராஜ், சுந்தர் உள்ளிட்ட வீரர்கள் இவரின் பயிற்சியின் கீழ்தான் ஆடி தேசிய அணிக்கு தேர்வாகினர்.டிராவிட் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக உள்ளார்.

Related Stories:

>