குளிர்ந்த காற்றுடன் மேகமூட்டத்துடன் காணப்படும் சென்னை : பலப்பகுதிகளில் லேசான சாரல் மழை!!

சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையின் பல பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்துள்ளது. குமரி கடற்கரையில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழையும் சென்னை உட்பட வட மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதலே குளிர்ந்த காற்று வீசி வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்படுகின்றன. அடையாறு, பட்டினம்பாக்கம், திருவல்லக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் கத்திரி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தற்போது பெய்துள்ள சாரல் மழை மண்ணை மட்டுமல்லாமல் மக்கள் மனங்களையும் குளிர்வித்து வருகிறது.

Related Stories:

>