விளையாட்டு துளிகள்

இந்திய வீரர்கள் விலகல்

சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் போட்டி ஜூன் ஒண்ணாம் தேதி முதல் 5ம் தேதி வரை நடக்கிறது. அந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்தியர்களுக்கு 21நாட்கள் குவாரன்டைன் கட்டாயம். அதனால் அந்த தொடரில் இருந்து இந்திய வீரர்கள் சாய் பிரனீத், வீராங்கனைகள் அஸ்வினி பொன்னப்பா, சிக்கி ெரட்டி ஆகியோர் விலகி உள்ளனர்.

நடக்குமா? தெரியவில்லை

‘ஜப்பானில்  கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஒலிம்பிக் போட்டி நடக்குமா என்பதை  உறுதியாக ெசால்ல முடியவில்லை. ஒரு வீராங்கனையாக ஒலிம்பிக்கில் விளையாட  விரும்புகிறேன். ஆனால் யாரும் பாதுகாப்பாக உணரவில்லை என்பதுதான் மக்களில்  ஒருத்தியாக எனது கருத்து’ என்று ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா  கூறியுள்ளார்.

கட்டுபாடுகளை

விரும்பவில்லை

மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் பம்மன்ட்(நியூசிலாந்து,) ‘ஐபிஎல் தொடரின் போது மும்பை அணியின் மூத்த வீரர்கள், பயோ பபுள் கட்டுபாடுகளை விரும்பவில்லை. ஆனாலும் நாங்கள் பாதுகாப்பாகதான் இருந்தோம். பயணங்கள்தான் கடுமையாக இருந்தன’ என்று கூறியுள்ளார்.

புதிய அணியில் வாய்ப்பு

இலங்கைக்கு  எதிரான ஜூலை மாத தொடரில் தவான் தலைமையில் தனி அணி  விளையாடும் என்று தகவல்  பரவியுள்ளது. கூடவே  இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் வாய்ப்பு கிடைக்காத  வருண் சக்கரவர்த்தி, ஹர்திக், புவனேஷ்வர்,  பிரித்வி ஷா, முகமது  சிராஜ், படிக்கல்,  கெய்க்வாட், சூர்யகுமார், சஞ்சு சாம்சன் என பலருக்கும்  வாய்ப்பு கிடைக்கலாம்.

மீற வேண்டாம்

குரோஷியா சென்றுள்ள இந்திய துப்பாக்கி சுடும் அணியை வாழ்த்தியுள்ள மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, ‘மற்ற நாடுகளில் உள்ள கொரோனா பரவல் தடுப்பு விதிகளை மீற வேண்டாம். பயிற்சியில், போட்டியில் கவனம் செலுத்துங்கள்.  உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்’ என்றார்.

முதல் கட்ட தடுப்பூசி

கிரிக்கெட் வீரர்கள்  கோஹ்லி, தவான், உமேஷ், ரகானே, புஜாரா, இஷாந்த், ஆகியோரை தொடர்ந்து நேற்று தினேஷ் கார்த்திக்,  பும்ரா, தீபக், ஷர்துல், வீராங்கனை ஷம்ரிதி மந்தானா ஆகியோர் நேற்று முதல் கட்ட கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.  

Related Stories:

>