சில்லி பாய்ன்ட்

* இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி  நேற்று மும்பையில்  முதல் கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

* இங்கிலாந்து செல்லும் இந்திய அணி அங்கு ஜூன் மாதம்  ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடுகிறது. தொடர்ந்து இங்கிலாந்தக்கு எதிராக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் 5 டெஸ்ட்  போட்டிகளில் விளையாடுகிறது. இடையில் உள்ள ஜூலை மாதத்தில் இந்திய அணி இலங்கை செல்கிறது. அங்கு 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் இந்தியா விளையாட உள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ்  கங்குலி நேற்று தெரிவித்தார். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இங்கிலாந்து-இலங்கை-இங்கிலாந்து பயணத்தை தவிர்த்து, இலங்கைக்கு தனி அணி அறிவிக்கப்படலாம்.

* டோக்கியோவில் ஒலிம்பிக் நடத்த ஜப்பான் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்  சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாக் தனது ஜப்பான் பயணத்தை நேற்று ரத்து செய்துள்ளார்.

* கொரோனா தொற்று காரணமாக  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கம் வென்ற கால்பந்து வீரர் ஃபோர்நேடோ  ஃபிராங்கோ(84) ,  கிரிக்கெட் வீரர் பியூஷ் சாவ்லாவின் தந்தை  பிரமோத்குமார் சாவ்லா   ஆகியோர் நேற்று உயிரிழந்தனர்.

Related Stories:

>