குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை

உடுமலை : உடுமலை ஒன்றியம் தும்பலபட்டி, கரட்டுமேடு பகுதியில் இருந்து மானுப்பட்டி செல்லும் இணைப்பு சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால், சிதிலமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட தோட்ட சாலைகள் உள்ளன. சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. முக்கியமாக மானாவாரி சாகுபடி நடக்கிறது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வாகனங்களில் இந்த சாலை வழியாக கொண்டு செல்கின்றனர். ஏராளமான கோழிப்பண்ணைகளும் உள்ளன.

மோசமான சாலை காரணமாக வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. விளைபொருட்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல், கரட்டுமேடு- புங்கமுத்தூர் சாலையில் பழுதடைந்துள்ளது. இந்த சாலையை சீரமைக்க ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு பல வாரங்கள் ஆகிறது. பணிகள் நடக்கவில்லை. இதனால், வாகனங்களில் செல்ல முடியாததால், உடுக்கம்பாளையம் பிரிவு வழியாக சுற்றிக்கொண்டு செல்கின்றனர். உடனடியாக, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>