கர்நாடகாவில் கட்டுமான பணிகளுக்கு தடை மூட்டை முடிச்சுகளுடன் நடந்தே தமிழகம் வரும் தொழிலாளர்கள்

ஓசூர்: கர்நாடகாவில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், மூட்டை முடிச்சுகளை கட்டி கொண்டு, தமிழக தொழிலாளர்கள் ஓசூர் வழியாக தமிழகத்திற்கு நடந்தே வருகின்றனர்.கர்நாடக மாநிலத்தில், கொரோனா 2வது அலையின்  தாக்கம் தீவிரமாகி வருவதால், அங்கு மேலும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய முழு ஊரடங்கில் கட்டுமான பணிகளுக்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது. இதனால்,  கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி, பணியாற்றி வந்த தமிழக தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளுடன் தமிழக எல்லையான ஜூஜூவாடி வழியாக தமிழகம் திரும்பி வருகின்றனர். கர்நாடக  மாநிலத்தில் பஸ் போக்குவரத்து இல்லாத நிலையில், ஆட்டோக்களிலும், கடும் வெயிலில் நடந்தபடியும் தமிழக எல்லைக்கு மூட்டை முடிச்சுகளுடன் தொழிலாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஜூஜூவாடியில் தமிழக சிறப்பு பஸ்கள் மூலம்  ஓசூர் வரும் அவர்கள், தங்களது மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.

Related Stories:

>