24 மணி நேரத்தில் 3.6 கோடி திரண்டது; இலக்கை அடைந்து நாட்டிற்கு உதவ போராடுவோம்: விராட் கோலி ட்வீட்

மும்பை: இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் கொரோனா நிவாரண நிதி திரட்டும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து கேட்டோ என்ற அமைப்பை தொடங்கி உள்ளனர். இந்த அமைப்பின் மூலம் 7 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ள நிலையில் அவர்கள் ரூ.2 கோடி நிதி வழங்கி உள்ளனர். இந்நிலையில் 24 மணி நேரத்தில் 3.6 கோடி நிதி கிடைத்துள்ளதாக கோஹ்லி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

24 மணி நேரத்திற்குள் 3.6 கோடி ரூபாய், எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகமாக உள்ளது. எங்கள் இலக்கை அடைந்து நாட்டிற்கு உதவ போராடுவோம் என தெரிவித்துள்ளார். அனுஷ்கா சர்மா தனது ட்விட்டரில், ``இதுவரை நன்கொடை அளித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் பங்களிப்புக்கு நன்றி. நாங்கள் பாதி வழியைக் கடந்துவிட்டோம், தொடர்ந்து செல்லலாம்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>