கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் 33 அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். கொரோனா நிலவரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சி அமைத்து 3-வது நாளான இன்று அமைச்சைவைக் கூட்டம் நடைபறெ்று வருகிறது. கொரோனா பரவல் கட்டுப்பாடுகள், மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக எழுந்துள்ள அவசர நிலை உள்ளிட்ட அம்சங்களும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக தொழில்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். 

ஆக்சிஜன் பற்றாக்குறை தமிழகத்தில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஆக்சிஜன் தேவை ஒரு நாளைக்கு, 220 டன்னாக இருந்தது. தற்போது அதன் தேவை, 450 டன்னாக உயர்ந்துள்ளது. இதனால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பிரச்னை முற்றுவதற்கு முன் தேவையான அளவு ஆக்சிஜனை வழங்கும்படி முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக தொழில்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Stories:

>