கொரோனா தடுப்பு பணிகளுக்கு கோஹ்லி, அனுஷ்கா 2 கோடி உதவி

மும்பை: நாட்டில் ஏற்பட்டுள்ள ெகாரோனா பாதிப்புகள்  குறித்து கவலைப்படும் கோஹ்லி, ‘கொரோனா நிவாரண பணிகளுக்கு ‘கேட்டோ’ என்ற அமைப்பின் மூலம் 7கோடி ரூபாய் திரட்டும்’ பணியில் ஈடுபட்டுள்ளார். அதற்கு தங்கள் பங்காக  கோஹ்லியும்,  அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் இணைந்து 2 கோடி ரூபாய் நிதி வழங்குகின்றனர். இதன் மூலம் நிதி திரட்டும் சுமை குறைந்துள்ளது என்று கோஹ்லி தெரிவித்துள்ளார்.மேலும் அவர், ‘நமது நாடு இதுவரை கண்டிராத இப்போது நெருக்கடியான நிலைமையில் உள்ளது.  எனவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எவ்வளவு பேரை காப்பாற்ற முடியுமா, அத்தனை பேரையும் காப்பாற்றுவது முக்கியம்.

கடந்த ஓராண்டாக மக்கள் அனுபவித்து வரும் துயரத்தை கண்டு நானும், அனுஷ்காவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளோம்’ என்று கூறியுள்ளார். கேட்டோ  மூலம் திரட்டும் நிதி ‘ஏசிடி கிராண்ட்ஸ்’ என்ற அமைப்பின் மூலம்  ஆக்சிஜன், மருந்துகள் தேவைகளுக்காகவும், ஆட்கள் உதவி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்காகவும்  செலவிடப்படும்.சோனு சூட் உதவி: மீரட்டில் உள்ள தனது உறவினருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவையென சுரேஷ் ரெய்னா ‘டிவிட்’ செய் சிறிது நேரத்தில் நடிகர் சோனு சூட் சிலிண்டர் ஏற்பாடு செய்து உதவியுள்ளார்.

Related Stories:

>