இந்திய மருத்துவர்களுக்கு போப் ஆண்டவர் பாராட்டு

வாடிகன் சிட்டி: கொரோனா இரண்டாவது அலையின் பிடியில் சிக்கி இந்திய மக்களுக்கு போப் பிரான்சிஸ் அனுப்பியுள்ள செய்தி குறிப்பில் “கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுடன் மனதார துணை நிற்கிறேன். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பங்கள், அவர்களை பராமரிப்பவர்கள், குறிப்பாக தங்களது அன்பானவர்களை இழந்தவர்களுடன் எனது எண்ணங்கள் இருக்கின்றது. மக்களின் தேவைகளை உடனடியாக சரிசெய்வதற்காக ஏராளமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். விடாமுயற்சி, வலிமை மற்றும் அமைதி ஆகியவற்றை கடவுள் அவர்களுக்கு கொடுக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>