சட்டீஸ்கரில் பரிதாபம்: ஹோமியோபதி மருந்து குடித்த 7 பேர் பலி

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோர்மி கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திரோசெரா-30 என்ற ஹோமியோபதி மருந்தை குடித்துள்ளனர். இது 91% ஆல்கஹால்  கலந்த மருந்தாகும். இந்த மருந்தை குடித்ததும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மறுநாள் காலையில் இறந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து அந்த மருந்தை குடித்த அதே குடும்பத்தை சேர்ந்த மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதைத் தொடர்ந்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மருந்தை குடித்த  மேலும் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் இருந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கொரோனா பாதித்ததால் அவர்கள் இந்த மருந்தை குடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Related Stories:

>