மருத்துவமனையில் பிரகாஷ் படுகோன்

இந்தியாவின் பிரபல பேட்மின்டன் நட்சத்திரம் பிரகாஷ் படுகோன்(65). கர்நாடகாவை சேர்ந்த இவர் 1970, 1980களில் இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவர். இப்போது ஓய்வில் இருக்கும் பிரகாஷ் 1980ம் ஆண்டு உலகின் நெம்பர்  ஒன் வீரராக திகழ்ந்தார். பெங்களூரில் வசித்து வரும் அவருக்கும், அவரது மனைவி உஜ்ஜாலா, மகள் அனீஷா ஆகியோருக்கும் தொற்று ஏற்பட்டு  வீட்டிலேயே தனிமைப் படுத்திக் ெகாண்டனர்.  பிரகாசுக்கு காய்ச்சல் அதிகரித்ததால்   சனிக்கிழமை அங்குள்ள தனியார் மருத்துவமனையல் அனுமதிககப்பட்டார். இப்போது ‘பிரகாஷ் உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பவார்’ என்று அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>