பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள்: மக்கள் வருகை இல்லாமல் பொலிவிழந்த சிம்ஸ் பூங்கா

குன்னூர்: ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர்கள் பல வண்ணங்களில் பூத்து குலுங்கினாலும் சுற்றுலா பயணிகள் வர தடை உத்தரவால்  குன்னூர் சிம்ஸ் பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஜனவரி முதல் வாரத்தில் கோடை சீசனையொட்டி சுமார் 5 லட்சம் பல்வேறு மலர் நாற்றுகள் மற்றும் விதைகள் நடவு செய்யப்பட்டன.

இந்த நிலையில் தற்போது பூங்காவில் உள்ள மலர்கள் அனைத்தும் பூக்க துவங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வந்து செல்லும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலா பயணிகள் வர தடை உத்தரவு அமலில் உள்ளதால் பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது. மே மாதம் இறுதியில் நடைபெறும் பழக்கண்காட்சி இந்தாண்டு நடைபெறுமா என்பது கேள்வி குறியாக உள்ளது.

Related Stories: