கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர், ஆக்சிஜன் விற்பனை தடுக்க வேண்டும்

புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்து பொருட்கள் விலை அதிகமாக விற்கப்படுவது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசவுட் மற்றும் எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.ரவீந்திரா பட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘ரெம்டெசிவிர், ஆக்சிஜன் போன்ற அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் விலை அதிகமாகவும், கள்ள சந்தைகளிலும் விற்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. பொதுமக்கள் துயரத்தில் இருக்கும்போது, அவர்களின் இயலாமையைப் பயன்படுத்தி சம்பாதிக்கும் முயற்சி கடும் கண்டனத்துக்குரியது.

மத்திய அரசு இதை முக்கிய பிரச்னையாக கருத்தில் கொள்ள வேண்டும். சிறப்பு குழு அமைத்து குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும்’ என்றும் உத்தரவிட்டனர். 18 வயது முதல் 44 வயதிலானவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதை மாநில அரசுகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளன. இந்த விவகாரத்தில் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்குவது சரியான அணுகுமுறையாக இருக்கும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். 

Related Stories: