பெருவாயில் மேற்கு ஒன்றியத்திற்கு திமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்

கும்மிடிப்பூண்டி: பெருவாயில் மேற்கு ஒன்றியத்திற்கு, திமுக உறுப்பினர் சேர்க்கை படிவத்தை மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ நிர்வாகிகளுக்கு வழங்கினார். கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயில் ஒன்றியத்திற்கு, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்வு, ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன் ஏற்பாட்டில் நடந்தது. இதில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். பொதுகுழு உறுப்பினர்கள் குணசேகரன், வெங்கடாசலபதி, ஒன்றிய நிர்வாகிகள் ஜோதிலிங்கம், இயேசு ரத்தினம், பரத்குமார், முனிவேல், ஞானம், உதயகாந்தம்மாள், அணிகளின் நிர்வாகிகள் தேவேந்திரன், பல்லவன், பாஸ்கரன், ஆறுமுகம், மோகன்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனை தொடர்ந்து, மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் திமுக உறுப்பினர் படிவத்தை மேற்கு ஒன்றிய நிர்வாகிகளிடம் வழங்கினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தினம்தோறும் மக்களுக்கு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என உற்று நோக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதே போன்று திமுகவில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் எண்ணத்திலும், தொகுதிக்கு 50 ஆயிரம் பேர் திமுக உறுப்பினராக சேர்க்க கழகத் தொண்டர்கள் வார்டு கிளை, ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம், அரசு செய்த சாதனைகளை விளக்கி கூறவும் உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கவும் வேண்டுமென்று சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் தேர்வாய் இளங்கோவன், பிர்லா, அன்பு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post பெருவாயில் மேற்கு ஒன்றியத்திற்கு திமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: