7 ஐஐடி, 22 என்ஐடி.க்களில் தலைவர், நிர்வாக குழு இல்லை: ஒன்றிய கல்வி அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: ஐஐடி, என்ஐடி.க்களில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்து பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘’7 இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐடி) மற்றும் 22 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்ஐடி) ஆகியவற்றில் தலைவர் மற்றும் நிர்வா குழுவினர் பதவி காலியாக உள்ளது. இப்பதவிகளில் யாரேனும் நியமிக்கப்படும் வரை, இந்த ஐஐடி.க்கள் மற்றும் என்ஐடி.க்களில் இயக்குநரே நிர்வாக குழுவை தலைமையேற்று நடத்துவார். அதே போல், நிர்வாக குழு பதவியை பொறுத்தவரை, 11 ஐஐடி.க்களின் பல்வேறு துறைகளிலும், 30 என்ஐடி.க்களில் 2 நிர்வாக குழு பதவி தயார்நிலையில் உள்ளது. 14 என்ஐடி.க்களில் மாநில அரசுகளின் ஒப்புதல் நிலுவையில் உள்ளது.

The post 7 ஐஐடி, 22 என்ஐடி.க்களில் தலைவர், நிர்வாக குழு இல்லை: ஒன்றிய கல்வி அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: