என்ன ஒரு போட்டி... மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து: அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்

டெல்லி: மம்தா பானர்ஜிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அங்கு திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி மற்றும் பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

மொத்தமுள்ள 294 தொகுதிகளில், ஆட்சியமைப்பதற்கு 148 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தை பொறுத்தவரை தொடக்கம் முதலே அதிக தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னணி வகிக்கின்றது. இதைத்தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் 206 தொகுதிகளிலும், பாஜக 81 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றது. மேலும் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்பது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; என்ன ஒரு போட்டி... மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற மம்தா பானர்ஜிக்கும் அம்மாநில மக்களுக்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: