உலக பாதிப்பு 15 கோடியானது

புதுடெல்லி: உலகம் முழுவதும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதன் பாதிப்பு, பலியில் உலக வல்லரசான அமெரிக்காதான் முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை பிரேசில் பிடித்துள்ளது. 3வது இடத்தில் மெக்சிகோவும், 4வது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இந்நிலையில், உலகளவிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 15 கோடியை தாண்டியது. தற்போது. இந்த எண்ணிக்கை 15 கோடியே 20 லட்சத்து 9 ஆயிரத்து 451 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 31 லட்சத்து 63 ஆயிரத்து 387 பேர் பலியாகி இருக்கின்றனர். தொற்றில் இருந்து 12 கோடியே 77 லட்சத்து 11 ஆயிரத்து 98 பேர் குணமாகி இருக்கின்றனர், 1 கோடியே 93 லட்சத்து 14 ஆயிரத்து 866 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 791 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தற்போது, உலகளவிலான ஒருநாள் பாதிப்பில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இந்தியாதான் முதலிடம் வகித்து வருகிறது.

Related Stories: