ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி: தனிமையில் இருந்து பணியை தொடருவேன்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அறிகுறி எதும் இல்லை எனவும், நான் வீட்டிலேயே தனிமை செய்துக் கொண்டேன் என அவரது ட்வீட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நான் தனிமையில் இருந்து கொண்டே எனது பணியை தொடருவேன் என கூறியுள்ளார். மேலும் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. தினமும் 3 லட்சத்து மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் இந்தியாவில் 3.79 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை அனுப்பியது.

அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாடெங்கிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. காட்டுத்தீயாய் பரவி வரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன.

Related Stories: