இந்தியா அசாம் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளை மத்திய அரசு செய்யும்: பிரதமர் மோடி உறுதி Apr 28, 2021 மத்திய அரசு அசாம் பிரதமர் மோடி டெல்லி: அசாம் மாநிலத்தில் இன்று காலை 7.51 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக உயர்ந்துள்ளது. சோனித்பூரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. மேற்கு வங்க மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்கள், மற்றும் சில வடகிழக்கு மாநிலங்கள், பூடான் நாட்டிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. பயங்கர நிலநடுக்கம் குறித்து மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவாலுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாரக உள்ளோம் என மோடி உறுதி அளித்தார். அதேபோல் அசாம் மாநிலம் விரைந்து பழைய நிலைக்கு மாறும் எனவும் அதற்காக நான் இறைவனை வேண்டுகிறேன் என கூறினார்.
அரசியல் தலைவர்களின் பெயர் வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி
கட்டுப்பாடுகளால் வாகன விலை 2 மடங்கு உயர்வு 28 சதவீத ஜிஎஸ்டியை நாங்கள் ஏன் தர வேண்டும்? ராஜீவ் பஜாஜ் காட்டம்
புதிய மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது பற்றி பரிசீலனை: உச்ச நீதிமன்றம் தகவல்; 7ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைப்பு
ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!