கொரோனா எதிரொலி: அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாஸ்க் அணியாமல் பங்கேற்ற தாய்லாந்து பிரதமருக்கு அபராதம் விதிப்பு.!!!

பாங்கொக்: கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழலில் மாஸ்க் அணியாத தாய்லாந்து பிரதமர் ப்ரயுத் சான்-ஒச்சாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் தங்களின் இயல்பு நிலையை இழந்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனவால் தாய்லாந்து நாட்டில் இதுவரை சுமார் 55,460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 140 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். மேலும் நடந்த 14 நாட்களில் மட்டும் 22,835 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தாய்லாந்து அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், போன்ற பல்வேறு இடங்கள் மூடப்பட்டுள்ளன.

பேங்காக்கிலும், தாய்லந்தின் 47 பகுதிகளிலும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதோருக்கு 20,000 பாட் ($640) அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளனர். இந்த நிலையில் அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாஸ்க் அணியாமல் தாய்லாந்து பிரதமர் ப்ரயுத் சான்-ஒச்சாவுக்கு கலந்து கொண்டதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ப்ரயுத் சான்-ஒச்சாவுக்கு ரூ.14,273 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: