கொரோனா பரவலை தடுக்க ஞாயிறு முழு ஊரடங்கு பெரம்பலூர், அரியலூர் வெறிச்சோடியது

பெரம்பலூர் : ஞாயிறு ஊரடங்கையொட்டி பெரம்பலூரில் 102 அரசு பஸ்கள் டெப்போவுக்குள் முடங் கியது. உழவர்சந்தை, 10ஆ யிரத்திற்கும்மேற்பட்ட கடை கள், தியேட்டர்கள் அனைத் தும் மூடப்பட்டதால் வெறிச் சோடியது பெரம்பலூர்.கொரோனா வைரஸ் தொற் றுப் பரவலைத் தடுப்பதற் காக மத்திய, மாநில அரசுக ளால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ம்தேதி முதல், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் ஊரடங்கு உ த்தரவுப் பிறப்பிக்கப்பட்டு, பல்வேறுகட்டத் தளர்வுகளு டன் அமுலில் இருந்து வருகிறது.

தற்போதுஉருமாறிய கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இரண்டாவது அலையாக அதிவேகமாக பரவி மிகுந்த பாதிப்பை ஏற் படுத்தி வருகிறது.இதன் காரணமாக பொது ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் வ ருகிற 30ம்தேதி இரவு12ம ணி வரை நீட்டிக்கப்பட்டுள் ளது. அதேபோல் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்தொற்றைக் கட்டுப்படுத்த நேற்று (25ம்தேதி) ஞாயிற்றுக்கிழமை பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.இதனையொட்டி போக்குவ ரத்து முற்றிலும் முடக்கப் பட்டுள்ளதால், பெரம்பலூர் துறை மங்கலத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக டெப்போவில்மொத்தமுள்ள 102 அரசு நகர், புறநகர் மற்றும் விரைவு பஸ்களும், ஸ்பேர் பஸ்களும் வெளியே வராமல் முடங்கிக் கிடக்கின்றன.

 50க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள், 100க்கும் மேற்பட்ட மினிபஸ்கள் இயக்கப்படாமல் ஷெட்டுக்குள் முடங்கிக்கிடந்தன.இதனா ல் புது பஸ்டாண்டு, பழைய பஸ்டாண்டு 2ம்வெறிச்சோ டிக் காணப்படுகின்றன. மேலும் திருச்சி-சென்னை தே சிய நெடுஞ்சாலை, அரிய லூர் தேசியநெடுஞ்சாலை, ஆத்தூர், துறையூர் நெடுஞ் சாலைகள், ஊரக இணைப் புச்சாலைகள் அனைத்தும் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. மருந்துப் பொருட்கள், பால் கேன்கள் ஏற்றிய சில வாக னங்கள் மட்டுமே சாலைக ளில் சென்றுகொண்டிருந் தன.

தினமும் காலையில் நூற்றுக்கணக் கானோர் கூடுகின்ற வடக்குமாதவி சாலையிலுள்ள உழவர்சந் தை, பழைய பஸ்டாண்டு அருகேயுள்ள தினசரி காய் கறி மார்க்கெட் ஆகியன மூ டப்பட்டிருந்தது.அதேபோல் வணிக நிறுவ னங்கள் அனைத்தும் மூடப் பட்டிருந்ததால் பெரியகடை வீதி, போஸ்ட் ஆபிஸ் தெரு, என்எஸ்பி.ரோடு, பள்ளிவா சல்தெரு, காமராஜர் வளை வு,ரோவர் வளைவு, திருச்சி மெயின்ரோடு, எளம்பலூர், வடக்கு மாதவி சாலைகள், திருநகர், ஆலம்பாடி சாலை கள், துறைமங்கலம், வெங்கடேசபுரம், சங்குப்பேட்டை உள்ளிட்ட பெரம்பலூர் நக ரம்மட்டுமன்றி குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு பேரூ ராட்சிகள், வேப்பந்தட்டை, குன்னம்,வேப்பூர்,ஆலத்தூர்ஆகிய ஒன்றிய, தாலுக்கா தலைநகரங்கள், வி.களத் தூர், செட்டிக்குளம், கொள க்காநத்தம், பாடாலூர் உள் ளிட்ட அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள 10ஆயிரத்திற்கும்மே ற்பட்ட கடைகள் அடைக்கப் பட்டிருந்தன.5தியேட்டர்கள், பெரம்பலூர் மாவட்டவிளை யாட்டு மைதானம், கலெக் டர் அலுவலக சிறுவர் அறி வியல்பூங்கா ஆகியன மூடி க்கிடந்தன.

அரசு தலைமை மருத்துவம னை, வட்டார மருத்துவமனைகள், நகர்புற, ஊரக, ஆ ரம்ப சுகாதார நிலையங் கள், ஆவின்பாலகம், மருந் துக்கடைகள் மட்டுமே திற க்கப்பட்டுள்ளன. அரசு உத்தரவை மீறி நகரில் வாகனங்களில் பயணித்த நபர்களை போலீசார் எச்சரித்தும் அபராதங்கள் விதித்தும் சென்றனர்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், கிராம புறங்களில் உள்ள சிறு கடைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் கனரக வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலாக காணப்படும் முக்கிய சாலைகள் அனைத்திலும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. அதே போல் உழவர் சந்தை, மீன் மார்க்கெட், காய்கறி சந்தை உள்ளிட்ட கடைகளும் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே செல்வதை கண்காணிக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர், பொதுமக்களும் முழுஊரடங்கை கடைபிடிக்கும் வகையில் அவரவர்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கினர். இதனால் அரியலூர் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கையொட்டி சாலைகள் கடைத் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

போக்குவரத்து ஸ்தம்பித்தது

ஞாயிறு ஊரடங்கு காரணமாக பெரம்பலூர் நகர் மற்றும் மாவட்ட அளவில் இயங்கிவந்த 500க்கும் மேற்ப ட்ட ஷேர் ஆட்டோக்கள், 100 க்கும்மேற்பட்ட ஆட்டோக் கள், 300க்கும் மேற்பட்ட வேன்கள், 500க்கும் மேற்பட்ட மினிவேன்கள், லோடு ஆட் டோக்கள் இயக்கப் படாத தால் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்தது.

Related Stories: