கோவாக்சின் காலாவதி காலத்தை 2 ஆண்டுகளாக மாற்ற வேண்டும்: பாரத் பயோடெக் விண்ணப்பம்

புதுடெல்லி: கோவாக்சின் தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கான காலாவதி காலத்தை 24 மாதங்களாக நீட்டிக்கும்படி இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்துக்கு பாரத் பயோடெக் நிறுவனம் கடிதம் எழுதி இருக்கின்றது. இந்தியாவில் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த, சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு  வருகின்றன. இதில், 2 முதல் 8 டிகிரி செல்சியசிஸ் குளிர்நிலையில் கோவாக்சினை 6 மாதங்கள் பாதுகாத்து பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையிலேயே, இதன் விற்பனை மற்றும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  

எழு இந்நிலையில், இந்திய மருந்து கட்டுப்பாடு இயக்குனரகத்துக்கு பாரத் பயோடெக் நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், ‘கோவாக்சின் தடுப்பு மருந்தை பதப்படுத்தி பயன்படுத்துவதற்கான காலாவதி காலத்தை இப்போதுள்ள 6 மாதங்களில் இருந்து 24 மாதங்களாக (2 ஆண்டுகள்) நீட்டித்து அனுமதி வழங்க வேண்டும்,’ என்று கோரப்பட்டுள்ளது. மேலும், இந்த தடுப்பூசியை நீண்ட காலம் வைத்து பயன்படுத்த முடியும் என்பதற்கான ஆதாரங்களையும் இந்த நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.

Related Stories: