உத்தரகாண்டில் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி

டேராடூன்: உத்தரகாண்டில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி எல்லை சாலை அமைப்பு முகாமில் இருந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 384 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உத்தரகாண்டின் சம்னா பகுதியில் எல்லை சாலை அமைப்பின் முகாம் அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் எல்லை சாலை அமைப்பின் முகாம் சிக்கியது. தகவல் அறிந்து விரைந்த ராணுவத்தினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.  நேற்று வரை 8 சடலங்கள் மீட்கப்பட்டது. மேலும் எல்லை சாலை அமைப்பை சேர்ந்த 384 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பல முறை பனிச்சரிவு ஏற்பட்டதால் முகாமிற்கு செல்லும் சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கும் பணியில் எல்லை சாலை பணி குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 7ம் தேதி, சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை வெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 77 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: