திருவில்லிபுத்தூர் அம்மா உணவகத்தில் அனைவருக்கும் மாஸ்க்

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் அம்மா உணவகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. இதனால் கொரோனா ெதாற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என தினகரன் நாளிதழில் படத்துடன் ெசய்தி வெளியானது. இதனை தொடர்ந்து திருவில்லிபுத்தூர் நகராட்சி அதிகாரி மல்லிகா உத்தரவின்பேரில், அம்மா உணவகத்தில் வருவாய் ஆய்வாளர் செல்வராஜ் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு மட்டும், உணவு வழங்கப்பட்டது. மேலும் மாஸ்க் இன்றி வருபவர்களுக்கு மாஸ்க் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியையும் முறையாக கடைபிடித்து உணவு வாங்கியும், சாப்பிட்டும் சென்றனர்.

Related Stories: