மகாராஷ்டிராவில் உலகின் மிகப்பெரிய அணு உலை: பிரான்சுடன் விரைவில் ஒப்பந்தம்

புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலம், ஜெய்தாப்பூரில் பிரான்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்படுகிறது. இந்த அணுமின் நிலையம் உலகின்  மிகப்பெரிய அணுமின் நிலையமாக இருக்கும். இதற்காக, பிரான்சின் ஈடிஎப் நிறுவனத்துடன் இந்திய அணுசக்தி கழகம் இணைந்து செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஈடிஎப் நிறுவனம், அணுஉலைகை்களை அ்்மைப்பதற்கான பொறியியல் ஆய்வுகள் மற்றும் உபகரணங்கள் வழங்குவது தொடர்பான தனது ஒப்பந்த அறிக்கையை இந்திய அணுசக்தி கழகத்திடம் ஒப்படைத்தது. வரும் மாதங்களில் இந்த ஒப்பந்தம் இறுதி  செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் நிறைவடைவதற்கு 15 ஆண்டுகளாகும். இங்கு, 7 கோடி குடும்பங்களுக்கு மின் விநியோகம்  செய்யும் வகையில் 10 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

Related Stories: