விமானங்களை பயன்படுத்துங்க: மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு.!!!

புதுடெல்லி: ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முக்கிய தேவையாக இருந்து வரும் மருத்துவ ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே, போதிய ஆக்சிஜன் வழங்கலை உறுதிபடுத்த, பிரதமர் மோடி நேற்று விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

இதில், சுகாதாரம், சாலை போக்குவரத்து, தொழில் மேம்பாட்டு மற்றும் உள்நாட்டு வா்த்தக துறை உள்ளிட்ட அமைச்சக உயர் அதிகாரிகள் ஆக்சிஜன் குறித்த தகவல்களை பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, போதிய மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்ய, அதற்கான உற்பத்தியை அதிகரிக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் தட்டுப்பாடு பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. சில மாநிலங்களில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.  டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இருப்பினும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆக்சிஜன் விநியோகம் தொடர்பாக உயர்மட்டக் குழுவுடன் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆக்சிஜன் விநியோகம் தடையின்றி நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

20 மாநிலங்களுக்கு தினமும் 6,785 மெ.டன் ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆலைகளிடம் 3,300 மெ.டன் ஆக்சிஜன் பெறப்பட்டு மருத்துவ தேவைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆக்சிஜன் விநியோகத்தை விமானங்கள் மூலமாகவும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories:

>