எங்களுக்கு வேறு வழி தெரியல... கர்நாடகாவில் இரவு, வார இறுதியில் ஊரடங்கு; வழிபாட்டு தளங்கள், திரையரங்குகள் மூடல்!!

பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் இரவிலும் வார இறுதி நாட்களிலும் ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழகம், கேரளா, புதுச்சேரி, தெலங்கானா உட்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உட்பட பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் இரவு 9 மணி நேரத்தில் இருந்து காலை 6 வரையிலான இரவு நேர ஊரடங்கு இன்று அமலுக்கு வருகிறது.

மேலும் வாரம் தோறும் வெள்ளி இரவு 9 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை வார இறுதி நாட்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது காலை 6 மணி முதல் 10 மணி வரை பால், காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சமயத்தில் வழிபாட்டு தளங்கள், பள்ளி கல்லூரிகள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், வணிக வளாகங்கள், மதுபான விடுதிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு விடுதிகளில் பார்சல் எடுத்து செல்ல மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு போட்டிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 4ம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories:

>