கொள்ளையரிடம் இருந்து மீட்கப்பட்ட 1,382 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

சென்னை: சென்னையில் தனியாக நடந்து செல்லும் பொதுமக்களிடம் செல்போன் பறித்த வழிப்பறி கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்து மாநகர வடக்கு மண்டலத்தில் 433 செல்போன்களும், மேற்கு மண்டலத்தில் 258 செல்போன்களும், கிழக்கு மண்டலத்தில் 334 செல்போன்களும், தெற்கு மண்டலத்தில் 357 செல்போன்களும் என 1,382 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதனை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

Related Stories:

>