ஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை: ஐபிஎல் டி20 சென்னையில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை தலா 3 போட்டிகளில் பங்கேற்று 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Related Stories: