போளூர் நகர் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களால் கால்வாய்களில் கழிவுநீர் தேக்கம்-நோய் தொற்று பரவும் அபாயத்தில் மக்கள்

போளூர் : போளூர் நகர் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களால் கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் நோய் தொற்று பரவும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர்.தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இருந்தாலும் வியாபாரிகள் மறைமுகமாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் போளூர் நகரில் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தால், பலர் சாலை மற்றும் தெருக்களில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்திற்கு பிறகு வீசிசெல்கின்றனர். இதனால் பல இடங்களில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கால்வாய்களில் தேங்கி கொசு உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பேருராட்சி நிர்வாகம் எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அப்பகுதியினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும். நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு போளூர் பகுதியில் உள்ள தெருக்கள் மற்றும் கால்வாய்களில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி கழிவுநீர் கால்வாயில் தேங்காமல் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கல் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: