மத்தியப்பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்

ஜொராசி: மத்தியப்பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனா தொற்று 2-வது அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சம் புலம்பெயர் தொழிலாளர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தங்கி வேலை பார்த்து வந்த கூலித்தொழிலாளர்கள் உத்திரப்பிரதேசம், பீகார், சட்டீஷ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மாற்று ஒடிசா மாநிலங்களை நோக்கி பயணித்து வருகின்றனர்.

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் முன்பாக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட வேண்டும் என்பது இவர்களின் தவிப்பாக இருக்கிறது. இதனால் டெல்லி ரயில் நிலையங்களிலில் புலப்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் இருந்து மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்துக்கு 50-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு இன்று காலை புறப்பட்டது. இந்த பேருந்து மத்தியப்பிரதேசத்துக்கு செல்லும் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதாவது; டெல்லியில் இருந்து மத்தியப்பிரதேசத்தின் சர்தார்பூர், திகம்கருக்கு சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

குவாலியர் மாவட்டம் ஜொராசி என்ற இடத்தில் பேருந்து கவிழ்ந்ததில் பலர் காயமடைந்தனர். 3 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பயணிகளை அருகே உள்ள பொதுமக்கள் மற்றும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக மீட்டு அருகே உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அறிந்த டெல்லி துணை நிலை ஆளுநர்; புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய மாநிலங்களுக்கு அச்சத்தின் காரணமாக உடனடியாக திரும்புவதை கைவிட வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் டெல்லி அரசு செய்வதற்கு தயாராக இருக்கிறது. உங்களுக்கு தேவையான உதவி தொகைகள் மற்றும் உணவு, இருப்பிட வசதிகளை டெல்லி அரசு சார்பில் தீவிரமாக செய்யப்பட்டு வருவதாகவும், டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: