முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே நடைமேடை டிக்கெட் வழங்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை உள்பட பல்வேறு ரயில் நிலையத்துக்குள் செல்ல புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே நடைமேடை டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம், காட்பாடி, செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>