அமெரிக்காவில் பார், மாலில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி, 3 பேர் காயம்

ஒமஹா:  அமெரிக்காவில் ஷாப்பிங் மால், பார் ஒன்றில்  நடந்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 3 ஒருவர் காயமடைந்தார். அமெரிக்காவின் ஒமஹா பகுதியில் நெப்ரஸ்கா என்ற பெயரில் ஷாப்பிங் மால் இயங்கி வருகிறது. இந்த மாலில் வழக்கம் போல் நேற்றும் ஏராளமான பொதுமக்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்தனர். பிற்பகல் ஒரு மணியளவில் ஷாப்பிங் மாலில் நுழைந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்தவர்களின் மீது துப்பாக்கியால் சுட்டார்.

இதில், ஒருவர் கொல்லப்பட்டார். மக்கள் உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்தனர். ஒரு பெண் காயம் ்அடைந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பி சென்றார். அவரை அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் மூலமாக அடையாளம் கண்டு, பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், கெனோசா கவுன்டியில் உள்ள சோமர்ஸ் ஹவுஸ் என்ற பாரில் குடித்து விட்டு தகராறு செய்த ஒருவர் வெளியேற்றப்பட்டார். கோபத்துடன் வெளியே சென்ற அவர், மீண்டும்  பாருக்குள் துப்பாக்கியுடன் வந்தார்.

அங்கிருந்தவர்களை சுட்டார். இதில், 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். பின்னர், அவர் தப்பிச் சென்று விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள இன்டியானாேபாலிசில் சில தினங்களுக்கு முன் வாலிபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 சீக்கியர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

Related Stories:

>