கொரோனா பரவல் அச்சம்: வேப்பிலையுடன் வந்த தலைமை தகவல் ஆணையர்

தஞ்சை: கொரோனா பரவல் அச்சம் காரணமாக தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு மாநில தலைமை தகவல் ஆணையர் வேப்பிலையுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாநில தலைமை தகவல் ஆணையர் ராஜகோபால் (ஓய்வு) தலைமையில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர் கோவிந்தராவ், மாவட்ட எஸ்.பி. தேஷ்முக்சேகர் சஞ்சய் ஆகியோர் உடன் இருந்தனர்.

கூட்டம் துவங்குவதற்கு முன்பு மாநில தலைமை தகவல் ஆணையர் ராஜகோபால் (ஓய்வு) கையில் வேப்பிலையுடன் வந்தார். மேலும் கலெக்டர் அலுவலகம் நுழைவாயிலில் வேப்பிலை தோரணம் தொங்கவிடப்பட்டிருந்தது. மேலும் கூட்டத்தில் மேஜையில் வேப்பிலை கொத்து கொத்தாக வைக்கப்பட்டிருந்தன. கொரோனா காரணமாக வேப்பிலை கிருமிநாசினியாக பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: