குன்னம் அடுத்த எழுமூர் கிராமத்தில் நீர் வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குன்னம்: குன்னம் அடுத்த எழுமூர் கிராமத்தில் நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் நேற்று அகற்றினர். பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அதனை மீட்டெடுக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மேலும் உயர் நீதிமன்றம் நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் ஆதாரத்தினை பெருக்க வேண்டும் என்ற உத்தரவின்படியும், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், எழுமூர் மேற்கு கிராமத்தில் நீர் வரத்து வாரி 0.45.00 ஹெக்டேர் பரப்பளவில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வந்ததை நீர்வளத் துறைமற்றும் வருவாய்துறை முன்னிலையில் நீர் தங்கு தடையில்லாமல் செல்வதற்கு நீர் வரத்து வாரி 0.45.00 ஹெக்டேர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு முழுவதுமாக அகற்றப்பட்டது. மேலும் இதுபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நீர்வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிகொள்ள வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு பொதுமக்கள் தாமாக முன்வர வேண்டும் என நீர்வள ஆதாரத்துறையின் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது….

The post குன்னம் அடுத்த எழுமூர் கிராமத்தில் நீர் வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: