உள்ளூர் நிர்வாகம் பிறப்பிக்கும் கட்டுப்பாடுகளை நினைவுச்சின்னங்கள் வளாகத்தினுள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்: பராமரிப்பாளர்களுக்கு தொல்லியல் துறை அறிவுறுத்தல்

புதுடெல்லி: தேசிய தலைநகரில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து  வருவதால், தேசிய தலைநகரில் உள்ள நினைவுச்சின்ன பராமரிப்பாளர்கள் உள்ளூர் நிர்வாகம் விதித்துள்ள கோவிட் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு  இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் (ஏஎஸ்ஐ) அறிவுறுத்தியது. டெல்லியில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக, தேசிய தலைநகர் மண்டலத்தில் உள்ள நினைவு சின்னங்கள் உள்ள பகுதிகளில் கோவிட் தடுப்பு விதிகள் முழுமையாக பின்பற்றப்படுகிறது.

இதுபற்றி தொல்லியல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: டெல்லி நினைவுச்சின்னங்கள் உள்ள பகுதிகளில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல விவகார அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து நினைவுச்சின்ன பராமரிப்பாளர்களும் உள்ளூர் நிர்வாகத்தால் தெரிவிக்கப்படும் கோவிட் தடுப்பு விதிமுறைகளையும் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளோம். நினைவுச் சின்னப்பகுதியை உள்ளூர் நிர்வாகம் மூட உத்தரவிட்டால் அதை நாங்கள் செய்வோம். டிஜிட்டல் டிக்கெட் விநியோக முறைக்கு மட்டுமே மாறச் சொன்னால், அதையும் செய்யுமாறு எங்ள் நினைவுச்சனின் பராமரிப்பாளர்களுக்கு அறிவுறுத்துள்ளோம். கண்காணிப்பாளர் தொல்பொருள் ஆய்வாளர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்குமாறு உத்தவிட்டுள்ளோம்.

அனைத்து நினைவுச்சின்னங்கள் பகுதிகளிலும் சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அனைத்து கொரோனா தடுப்பு தொடர்பான வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக பின்பற்றுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து நினைவுச்சின்னங்கள் பகுதியிலும் முககவசங்கள்,சானிடைசர்கள் பயன்பாடு, சமூக இடைவெளியை பராமரித்தால் ஆகியவை பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு கூறினார். இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிச் துறையின் கீழ் டெல்லியில் 173 நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதில்  செங்கோட்டை, ஹுமாயூனின் கல்லறை மற்றும் குதுப் மினார் உள்ளிட்ட  மூன்று யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களும் அடங்கும். இவை மட்டுமின்றி சப்தர்ஜங் கல்லறை, புராணா குய்லா, துக்ளகாபாத் கோட்டை மற்றும் பெரோஷா கோட்லா உள்ளிட்டவையும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>