ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் அர்ச்சகர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் அர்ச்சகர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில்  கொரோனா தொற்று பரவல் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் அரசு சார்பில் வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள் உட்பட கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா  தடுப்பூசி போடப்பட்டது. ஆனாலும் கடந்த 2 நாட்களில் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மீண்டும் கொரோனா  தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரி பெத்திராஜூ நேற்று கூறுகையில், ‘‘கடந்த 2 நாட்களில் கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 15 நாட்கள் வரை பணிக்கு வராமல் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கோயில் நுழைவுவாயிலில் தெர்மல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கோயிலை  தூய்மைப்படுத்த வேண்டும். பக்தர்கள் மற்றும் ஊழியர்கள்  சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: