சென்னை: அதானி குழுமத்துடன் இணைவதாக ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது. உள்நாட்டில் தங்கள் நிறுவனத்தின் விநியோக சங்கிலி உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும் வேகமாக வளர்ந்து வரும் தங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் திறனை மேலும் மேம்படுத்தவும் அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஃபிளிப்கார்ட் இணைந்து செயல்படும் என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே பொருட்களை வாங்கும் வசதிகொண்ட ஒரு பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதானி குழுமத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.