அதிகரிக்கும் கொரோனா 2வது அலை புதுவையில் ஒரே நாளில் 306 பேருக்கு தொற்று: 2 பேர் பலி

புதுச்சேரி: புதுவையில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் புதிய உச்சமாக 306 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர். புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் 3,348 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 210, காரைக்கால் - 71, ஏனாம் - 22, மாகே - 3 என மொத்தம் 306 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

புதுவை காமராஜ் நகர் கென்னடி வீதியை சேர்ந்த 67 வயது முதியவர் ஜிப்மரிலும், காரைக்கால் நிரவி கருக்கலச்சேரியை சேர்ந்த 44 வயது ஆண் நபர் காரைக்கால் அரசு மருத்துவமனையிலும் கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந் துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 691 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.57 சதவீதமாக உள்ளது. சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 92,821 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>