சோபியானில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீர்: சோபியான் நகரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளில் இருவேறு சம்பவங்களில் 3 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு - காஷ்மீரின் சோபியான் நகரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து பாதுகாப்பு படையினர் நேற்றிரவு குறிப்பிட்ட அந்த பகுதியை சுற்றுவளைத்து தாக்குதல் நடத்தினர். அதில் இரண்டு தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். முன்னதாக அதேபகுதில் நேற்று மாலை மற்றொரு தீவிரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டதால், மொத்தமாக 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜம்மு - காவல் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜம்மு - காஷ்மீர் காவல்துறை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சரணடைய வலியுறுத்தினோம்.

அவர்களது பெற்றோரும் சரணடைய வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதனால் பதிலடி தாக்குதல் நடத்தியதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் அமைப்பு குறித்து கண்டறியப்படவில்லை. நேற்று மாலை மற்ெறாரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில், தீவிரவாத அமைப்பான அன்சார் கஸ்வத்துல் ஹிந்த் தலைவர் இம்தியாஸ் அகமது ஷா உட்பட ஏழு தீவிரவாதிகள் சோபியான் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் நடந்த இரண்டு என்கவுண்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>