பல்லாவரம் அருகே தொடர் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட தொழிலாளி கைது: 53 சைக்கிள்கள் பறிமுதல்

பல்லாவரம்: பம்மல் மற்றும் அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்படும் சைக்கிள்கள் அடிக்கடி திருடு போவதாக சங்கர் நகர் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், திருநீர்மலை பஜனை கோயில் தெருவை சேர்ந்த குமார் (32), தொடர்ந்து அந்த பகுதிகளில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து பல்வேறு இடங்களில் திருடிய 53 சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், பகலில் அதே பகுதியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் தொழிலாளியாக பணிபுரிவதும், அப்போது சைக்கிள் உள்ள வீடுகளை நோட்டமிட்டு, இரவு நேரங்களில் திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தார். பெரும்பாலும், சைக்கிள் திருடு போனால், அதன் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்பதில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட குமார் தொடர்ந்து அந்த பகுதிகளில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். அவ்வாறு திருடிய சைக்கிள்கள் அனைத்தையும் மொத்தமாக குறைந்த விலைக்கு விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் மது அருந்தி ஊர் சுற்றி வந்துள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Related Stories: