ஐபிஎல் டி20 முதல் போட்டி: பெங்களூரு அணிக்கு 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி

சென்னை: ஐபிஎல் டி20 முதல் போட்டியில் பெங்களூரு அணிக்கு 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐபிஎல் டி20 போட்டியின் 14-வது சீசன் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் தொடங்கியது. ஐபிஎல் டி20 முதல் போட்டி டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். தொடர்ந்து, களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கவுள்ளது.

Related Stories: