திருமதி இலங்கை அழகி போட்டியில் வெற்றி பெற்ற புஷ்பிகா டி சில்வாவுக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை மேடையிலேயே பறித்த மற்றொரு அழகி கைது

கொழும்பு: திருமதி இலங்கை அழகி போட்டியில் வெற்றி பெற்ற புஷ்பிகா டி சில்வாவுக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை மேடையிலேயே பறித்த மற்றொரு அழகி கைது செய்யப்பட்டார். கொழும்புவில் போட்டி நடைபெற்ற கடந்த 4-ம் தேதி அன்று திருமதி இலங்கை அழகி பட்டம் புஷ்பிகா டி சில்வாவுக்கு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு கிரீடம் அணிவித்ததை ஏற்கமறுத்த திமதி உலக அழகி வெற்றியாளர் கரோலின் ஜூரி திடீரென சர்ச்சைக்குரிய முடிவை எடுத்தார்.

விவாகரத்து பெற்றவர், விருது பெறத் தகுதியற்றவர் என கூறி புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தை பறித்து இரண்டாமிடம் பிடித்தவருக்கு கரோலின் ஜூரி அணிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த புஷ்பிகா டி சில்வா மேடையில் இருந்து கண்ணீருடன் வெளியேறினார். கணவரை பிரிந்து வாழ்வதாகவும் தான் இதுவரை விவாகரத்து பெறவில்லை என  புஷ்பிகா டி சில்வா போட்டி ஏற்பாட்டு குழுவிடம் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட குழு அவருக்கு திருமதி இலங்கை அழகி பட்டம் வழங்க முடிவெடுத்தது.

கிரீடத்தை பறித்து காயம் ஏற்படுத்திய புகாரில் சிக்கிய கரோலின் ஜூரி மன்னிப்பு கேட்க மறுத்ததால் அவரை இலங்கை போலீசார் கைது செய்தனர். திருமதி இலங்கை அழகியாக தேர்வு செய்யப்பட்ட புஷ்பிகா டி சில்வா தனக்கு கிடைத்த பட்டத்தை ஒற்றை தாய் சமூகத்திற்கு அர்பணிப்பதாக குறிப்பிட்டார். கைது செய்யப்பட்ட கரோலின் ஜூரி 2019-ம் ஆண்டிற்கான திருமதி இலங்கை அழகி பட்டம் வென்றவர். இதனை தொடர்ந்து திருமதி உலக அழகியாக அவர் தேர்வு செய்யப்பட்டார். மேலும் கிரீடம் பரித்த போது உடந்தையாக இருந்த அழகு கலை நிபுணரான சூளா பத்வந்ரம் கைது செய்யப்பட்டார்.

Related Stories: